சில நாட்களாய் என்னுள் சில மாற்றங்கள்.

வாழ்க்கையில் அனைவருமே ஏதோவொரு முடிவைத்தேடியவாறே ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் வழியில் தான் தடைகள் பல. தடைகளைத் தாண்டி வெற்றியை அடைவதென்பது கடினமாக விடயமே. இவ்வாறு தான் நானும் பல்வேறு விதமான இலட்சியங்களுடன் எனக்கு பிரியமான துறையி;ல் ஆசையுடன் கால்பதித்தேன். உடனே குத்தியது பாரிய முள். விலகிச் செல்ல வேண்டும்  என தோன்றினாலும் முடியவில்லை. காரணம் என்னில் நம்பிக்கை வைத்துள்ள சிலரின் மனம் புண்படக்கூடாது என்பதால் எனது ஆசைகள் முடக்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. யாருக்கு தெரியும் எல்லோருடைய வாழக்கையிலும் ஏதோ ஒரு காரணத்துக்காக அநேகான விடயங்கள் முடக்கப்பட்டும் மறக்கப்பட்டதாகவுமே இருக்கலாம்.
எம்முள் உள்ள திறமைகளை மழுங்கடிப்பதற்காக பல மூதாதையர் கூட்டம் செய்கின்ற செயல்களினால் எம் இள நெஞ்சங்களில் ஏற்படுகின்ற வழிகளை யாரரிவார்? வாழ்வின் முடிவையே தேடிச்செல்வோமா என்று எண்ணங்களுடன் ஒவ்வொரு நாட்களையும் கடத்த வேண்டிய நிலையாகவுள்ளது. ஏதொ பிரிந்து சென்ற நட்புகளை மீள சந்திக்கும் போது மனதில் ஏதோ  ஒரு இனம்புரியாத ப+ரிப்பு. எமக்கென யாரும் இல்லை என நான் எண்ணும் போதெல்லாம் உனக்காக நான் இருக்கிறேன் என சில நாட்களாக ஒரு உறவின் குரல் ஒழித்தவண்ணமுள்ளது. ஆனால் என்னால் தான் அது நட்பா? அல்லது ????????????

என்னுள் சில மாற்றங்கள். காரணம் வெளியில் சொல்ல முடியாதுள்ளது. இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும் , வாழக்கையில் புதிய எண்ணங்களை ஏற்படுத்திவிட்டுள்ளது. எல்லா உறவுகளையும் தாண்டி , வெகு தூரம் வந்து விட்ட எனக்கு யாரும் இல்லை என  எண்ணி அழ நினைக்கும் போதெல்லாம் உனக்காக நான் உள்ளேன். ஏன் கலங்குகிறாய் என ஒரு குரல். ஏற்றுக்கொள்வதா? அல்லது நிராகரிப்பதா? என்பதில் எனக்கே ஒரு சந்தேகம். பல வருடம் நட்பாய், தாயாய் எனக்கு இருந்து தோல்கொடுத்த நீ சில நாட்களாய் மாத்திரம் வார்த்தையி;ல் மாற்றங்களை கொண்டு வந்ததன் அர்த்தம் புரியவில்லை. எனக்குள் பல வேளைகளில் ஏதோவொன்று தோன்றிய போதிலும் சூல்நிலை , அர்த்தமற்றவொன்று , எனது குடும்பம் என பல்வேறு காரணங்களினால் அவற்றை புறக்கணித்து வந்தேன். ஆனால் தற்போது நீயே அதை கூறும்போது இனம்புரியாத இன்பம் ஏற்பட்டபோதிலும் நிலைக்காத ஒன்றுக்காய் ஏன் ப+ரிக்;கிறாய்; என் எனது உள்மனது கோபிக்கிறது. அதுவும் சரிதான் என்னதான் இருந்தாலும் இது எனக்கு எட்டாக்கனிதான் பின் ஏன் நான் ஏங்குகிறேன் என எனக்கே புரியவி;ல்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s