இலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடையா?????

இலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடையா?????

இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இலங்கையில் சிலர் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்க காரணமே இந்த FACEBOOK தான். இதற்கு தடை விதிக்கப்பட்டால் எமது இளைஞர், யுவதிகள் மற்றும் FACEBOOK இணையத்தள பாவனையாளர்களின் நிலை என்னவாகும். யோசிக்க வேண்டிய விடயம்தான். உண்மையில் எனக்கும் கூட இணையத்தளத்தில் என்ன முன்னேற்ற நிலை வந்துள்ளது? என்ன புதிய வெப்சைட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இணையத்தளம் மூலம் என்மை உயர்த்திக் கொள்ளலாம்  என்ற விடயங்களை விட FACEBOOK இணையத்தளத்தில் என்ன புதிய விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எவ்வாறு எமது FRIENDS LIST  டை அதிகரித்துக்கொள்ளலாம். எவ்வாறு CHAT பண்ணுவதன் மூலம் எம்மை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தி கொள்ளலாம்  போன்ற விடயங்களிற்காக செலவிட்ட நேரம் அதிகம்;. இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில் நான் ஊடகவியல் கல்லூரியில் கற்று வெளியேறும் போது எனது நண்பியொருவர் எனக்கு AUTOGRAPE புத்தகத்தில் எழுதும் போது FACEBOOK இல் உனது எதிர்காலத்தை தொலைத்து விடாதே நண்பி” என எழுதிய நினைவுகள் தற்போது நினைவிற்கு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில்  FACEBOOK இணையத்தளம் தடை செய்யப்படுமெனில் இணையத்தளத்தை பாவிப்போருக்கு மட்டுமல்லாது மட்டுமல்ல , நாட்டின் பொருளாதாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  உலகளவில் பார்த்தால் கூட ஏற்கனவே அதகளவான FANS மூலம் உலகளாவிய ரீதியில் முதல் இடத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தற்போது பிள்ளதள்ளப்பட்டு , பிரசித்தி பெற்ற நடிகை ஒருவர்  ஒபாமாவையும் தாண்டிச்செல்லுமு; அளவிற்கு தனது நட்பு வட்டாரங்களை FACEBOOK இணையத்தளம் மூலம் அதிகரித்துக் கொண்டுள்ளமை போள்ற சுவாரஸ்யமான  சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில்  FACEBOOK இணையத்தளத்தை தடை செய்யப்பேகின்றார்கள் என்ற தகவலை கேட்டதுமே  நான் அது தொடர்பான தகவல்களை ஆராய ஆரம்பித்துவிட்டேன் ஊடகவியல் துறையில் இருப்பதால் தகவல்களை சேகரிப்பதில் சிரமம் இருக்கவில்லை. சம்பவம் தொடர்பாக இலங்கை தொலைதொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவிடம் வினவியபோது இலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடை விதிக்கப்பட மாட்டாது என  அவர் தெரிவித்தார். தனக்கு  FACEBOOK இணையத்தளத்தின் செயற்பாடுகள் தொடர்பாக, 50 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், ஒரு சிலர் இணையத்தளத்திலுள்ள பெண்களின் புகைப்படங்களை  தரவிறக்கம் செய்து அவை உடல் மாற்றம் செய்யப்பட்டு ஆபாச புகைப்படங்களாக இணையத்தளங்களில் வெளியிடப்படுவதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும், உலகளாவிய ரீதியில், பல மில்லியன் உறுப்பினர்களை கொண்ட FACEBOOK இணையத்தளத்தை தடை செய்வதன் மூலம், இலங்கையில், இணைய பாவனையாளர்களின் எண்ணிக்கை, பெருமளவு குறையுமென்பதால் தான் மாற்று முறையில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பரிசீலிக்க போவதாகவும் தெரிவித்தார். ஒரு சிலரின் செயல்கள் காரணமாக  இலங்கையில் FACEBOOK இணையத்தளத்தை பாவிக்கும் அனைவரும் பாதிக்கப்படவேண்டிய நிலை எதிர்காலத்தில் உருவாகலாம். எனவே இனியாவது தவறுகளை செய்பவர்கள் தங்களை திருத்திக்கொள்வதன் மூலம் பலரின் நட்பு வட்டாரங்கள் துண்டிக்கப்படுவதை தவிர்க்கமுடியும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s