மேல் மாகாணத்தில் மோட்டார் வாகன வருடாந்;த வறுமான கட்டணம் அதிகரிக்கபட்டுள்ளது. இது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும்; என மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் முற்சக்கர வண்டிகள் உட்பட வாகனங்களின் வறுமான அனுமதி கட்டணம் இதனூடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிலுக்கான வருடாந்த வறுமான அதிகரிப்பு கட்டணம் 300 ரூபாவிலிருந்து 400 ரூபாவாகவும், முற்சக்கர வண்டிகளுக்கு 275 ரூபாவிலிருந்து 500 ரூபாவாகவும் , 762 கிலோ கிராமிற்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கு 900 ரூபவாவிலிருந்து 1200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் மோட்டார் வாகனங்களுக்கான வறுமான அனுமதி கட்டணம் 2 ஆயரம் ரூபாவிலிருந்து, 2 ஆயிரத்து 200 ரூபாவாகவும் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ் வண்டிகளுக்கு இறுக்கை ஒன்றுக்கு 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும் , கட்டணங்கள் அதிகரிகப்பட்டுள்ளன. இதேவேளை 400 கிலோ கிராமிற்கு குறைவான பாரமுடைய வேன்களுக்கான கட்டணம் குறைக்கபட்டுள்ளதாக மேல் மாகாண மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மோட்டார் வாகன ஓட்டுனர்களுக்கு இனி ஆப்பு….
Advertisements