முரளியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தில் நாணய சுழற்சி

இலங்கை மற்றும் இந்திய அணிகளிற்கிடையிலான மூன்று போட்டிகளை கொணட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை அணிக்கு குமார சங்கக்காரவும் , இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனியும் தலைமை தாங்குவுள்ளனர். சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு விடை கொடுக்கும் போட்டியாக இன்றைய போட்டி அமையவுள்ளது.  தொடரின் முதலாவது போட்டியுடன் முரளிதரன் ஓய்வு பெறபோவதாக அறிவித்திருந்தார். இன்று ஆரம்பமாகும் போட்டியின் போது முரளியை கௌரவிக்க அவருடைய உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணய மூலம் நாணய சுழற்சி  நடத்தப்படவுள்ளது. உலக துடுப்பாட்ட ஜாம்பவான்காள  பிரைன் லாரா , சச்சிக் டெண்டுல்கார் , சகீட் அனவர் பேன்றவர்களால் முகங்கொடுக்க முடியாத பந்து வீச்சாளர் என  கூறப்பட்ட முரளிதரன் இதுவரை டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் கூடுதலான விக்கட்டுகளை கைப்பற்றியுள்ள வீரராவார்.  அவர் இதுவரை  792 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்னும் 8 விக்கட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் 800 விக்கட்டுகளை கைப்பற்றிய முதல் வீரராகவும் , ஒரே வீரராhகவும் முரளி மகுடம் சூடவுள்ளார். அவர் அந்த இலக்கை அடைந்து இலங்கைகு பெருமை சேர்க்க வேண்டுமென வசந்தம் வாழ்த்துகிறது.

Advertisements