இலங்கையில் மோட்டார் வாகன ஓட்டுனர்களுக்கு இனி ஆப்பு….

மேல் மாகாணத்தில் மோட்டார் வாகன வருடாந்;த வறுமான கட்டணம் அதிகரிக்கபட்டுள்ளது. இது எதிர்வரும்  திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும்; என  மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் முற்சக்கர வண்டிகள் உட்பட வாகனங்களின் வறுமான அனுமதி கட்டணம் இதனூடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிலுக்கான  வருடாந்த வறுமான அதிகரிப்பு கட்டணம் 300 ரூபாவிலிருந்து 400 ரூபாவாகவும்,  முற்சக்கர வண்டிகளுக்கு 275 ரூபாவிலிருந்து 500 ரூபாவாகவும் , 762 கிலோ கிராமிற்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கு 900 ரூபவாவிலிருந்து 1200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல்  மோட்டார் வாகனங்களுக்கான வறுமான அனுமதி கட்டணம் 2 ஆயரம் ரூபாவிலிருந்து,  2 ஆயிரத்து 200 ரூபாவாகவும்  பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ் வண்டிகளுக்கு இறுக்கை ஒன்றுக்கு 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும் , கட்டணங்கள் அதிகரிகப்பட்டுள்ளன. இதேவேளை 400 கிலோ கிராமிற்கு குறைவான பாரமுடைய வேன்களுக்கான கட்டணம் குறைக்கபட்டுள்ளதாக மேல் மாகாண மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisements

மலேசியாவில் எனக்கு 108 , உனக்கு 38

108 வயதான மலேசிய பெண் தனது 38 வயதான கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ இணக்கம் தெரிவித்துள்ளார். பெண்ணின் கணவர் வைத்திய சிகிச்சைகளுக்காக ஒரு வருடம் அவரை பிரிந்திருந்ததாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வைத்திய சிகிச்சை தற்போது நிறைவு பெற்றுள்ளதையடுத்து இருவரும் இணைந்து வாழ தீர்மானித்தள்ளனர்.  2006 ஆம் ஆண்டு குறித்த பெண் 23 வது கணவராக 38 வயதான நபரை திருமணம் முடித்துள்ளார். ஏனைய 22 பேரையும் அவர் ஏற்கனவே விவாகரத்து செய்திருந்தார். 108 வயதான பெண் தன்னைவிட 70 குறைவான நபருடன் இல்லறம் நடத்தவது ஆசியாவில் புதுமையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடையா?????

இலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடையா?????

இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இலங்கையில் சிலர் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்க காரணமே இந்த FACEBOOK தான். இதற்கு தடை விதிக்கப்பட்டால் எமது இளைஞர், யுவதிகள் மற்றும் FACEBOOK இணையத்தள பாவனையாளர்களின் நிலை என்னவாகும். யோசிக்க வேண்டிய விடயம்தான். உண்மையில் எனக்கும் கூட இணையத்தளத்தில் என்ன முன்னேற்ற நிலை வந்துள்ளது? என்ன புதிய வெப்சைட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இணையத்தளம் மூலம் என்மை உயர்த்திக் கொள்ளலாம்  என்ற விடயங்களை விட FACEBOOK இணையத்தளத்தில் என்ன புதிய விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எவ்வாறு எமது FRIENDS LIST  டை அதிகரித்துக்கொள்ளலாம். எவ்வாறு CHAT பண்ணுவதன் மூலம் எம்மை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தி கொள்ளலாம்  போன்ற விடயங்களிற்காக செலவிட்ட நேரம் அதிகம்;. இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில் நான் ஊடகவியல் கல்லூரியில் கற்று வெளியேறும் போது எனது நண்பியொருவர் எனக்கு AUTOGRAPE புத்தகத்தில் எழுதும் போது FACEBOOK இல் உனது எதிர்காலத்தை தொலைத்து விடாதே நண்பி” என எழுதிய நினைவுகள் தற்போது நினைவிற்கு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில்  FACEBOOK இணையத்தளம் தடை செய்யப்படுமெனில் இணையத்தளத்தை பாவிப்போருக்கு மட்டுமல்லாது மட்டுமல்ல , நாட்டின் பொருளாதாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  உலகளவில் பார்த்தால் கூட ஏற்கனவே அதகளவான FANS மூலம் உலகளாவிய ரீதியில் முதல் இடத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தற்போது பிள்ளதள்ளப்பட்டு , பிரசித்தி பெற்ற நடிகை ஒருவர்  ஒபாமாவையும் தாண்டிச்செல்லுமு; அளவிற்கு தனது நட்பு வட்டாரங்களை FACEBOOK இணையத்தளம் மூலம் அதிகரித்துக் கொண்டுள்ளமை போள்ற சுவாரஸ்யமான  சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில்  FACEBOOK இணையத்தளத்தை தடை செய்யப்பேகின்றார்கள் என்ற தகவலை கேட்டதுமே  நான் அது தொடர்பான தகவல்களை ஆராய ஆரம்பித்துவிட்டேன் ஊடகவியல் துறையில் இருப்பதால் தகவல்களை சேகரிப்பதில் சிரமம் இருக்கவில்லை. சம்பவம் தொடர்பாக இலங்கை தொலைதொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவிடம் வினவியபோது இலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடை விதிக்கப்பட மாட்டாது என  அவர் தெரிவித்தார். தனக்கு  FACEBOOK இணையத்தளத்தின் செயற்பாடுகள் தொடர்பாக, 50 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், ஒரு சிலர் இணையத்தளத்திலுள்ள பெண்களின் புகைப்படங்களை  தரவிறக்கம் செய்து அவை உடல் மாற்றம் செய்யப்பட்டு ஆபாச புகைப்படங்களாக இணையத்தளங்களில் வெளியிடப்படுவதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும், உலகளாவிய ரீதியில், பல மில்லியன் உறுப்பினர்களை கொண்ட FACEBOOK இணையத்தளத்தை தடை செய்வதன் மூலம், இலங்கையில், இணைய பாவனையாளர்களின் எண்ணிக்கை, பெருமளவு குறையுமென்பதால் தான் மாற்று முறையில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பரிசீலிக்க போவதாகவும் தெரிவித்தார். ஒரு சிலரின் செயல்கள் காரணமாக  இலங்கையில் FACEBOOK இணையத்தளத்தை பாவிக்கும் அனைவரும் பாதிக்கப்படவேண்டிய நிலை எதிர்காலத்தில் உருவாகலாம். எனவே இனியாவது தவறுகளை செய்பவர்கள் தங்களை திருத்திக்கொள்வதன் மூலம் பலரின் நட்பு வட்டாரங்கள் துண்டிக்கப்படுவதை தவிர்க்கமுடியும்.

நான் உங்களை மண் சாப்பிட சொல்லல்ல

இப்போ எல்லாம் சாப்பாடு வாங்கியே என்ட காசெல்லாம் கரையுது.இப்போ இருக்கிற விலைவாசிக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கப்போனாலே 50/= அல்லது 100/= வ தாண்டிடுது. சாப்பாட்ட குறைக்கலாமா?அல்லது சாப்பிடுறத குறைக்கலாமா? இப்படியெல்லாம் புலம்புரவறா நீங்க…?போங்கப்பா,நானும் இப்படிதான் புலம்பிக்கொண்டிருந்தேன்.இந்த விஷயத்த கேள்வி பட்ட பிறகுதான் நாமலும் பழகியிருந்தா இப்போ காசெல்லாம் மீதப்படுத்தியிருக்கலாமே என்று தோணுது. என்ன விஷயம் என்று யோசிக்கிறீங்களா? இருங்க சொல்றன்.

2இந்தியாவில் உள்ள காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் தினமும் அரை கிலோ கிராம் மண் சாப்பிடுகிறார்.இவரின் பெயர் கோபி,வயது 25. இந்திய விழும்புரம் மாவட்டம் தியாக துருகத்தைச் சேர்ந்த இவர் தினசரி சாப்பிடும் மண்ணோடு இடைக்கிடையில் களிமண்,ஆற்று மணல் போன்றவற்றையும் ரசித்து சாப்பிடுகிறாராம்.

அதோடு இவருக்கு ரொம்ப பிடிச்ச,அதிகமாக சாப்பிடும் சாப்பாடு ஏரிக் களிமண். தனது 3வது வயதிலிருந்தே இந்தப்பழக்கத்தினை கொண்டுள்ள இவர் தனது காற்சட்டையில் தினசரி அரை கிலோ கிராமுக்கு மேலாக மண்ணை சேமித்து வைப்பாறாம்.பிறகு சிறிது சிறிதாக எடுத்து நாம் நொருக்கு தீனி சாப்பிடுவது போல  அவரும் சாப்பிடுவாறாம்.

இதைப்பற்றி  அவர் கூறியுள்ள கருத்து………

சிறு வயதிலிருந்தே எனக்கு மண்ணை  உணவாக  உண்ணும் பழக்கம் உண்டு.சிறி வயதில் மிகவும் குறைவாகத்தான் மண்ணை  உண்டு வந்தேன்.ஆனால் தற்போது மிகவும் அதிகமான மண்ணை உண்ணுகிறேன்.இதனால் என் உடம்பிற்கு எந்த வித உபாதைகளும் இதுவரை வந்ததில்லை.எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிட வேண்டும் என்கின்ற ஆர்வம் அதிகரித்து வருகின்றதே தவிர  குறையவில்லை  எனக்கூறியுள்ளார்.

என்ன எல்லோருக்கும் சாப்பாட்டு செலவினை குறைக்க யுக்தியொன்று கிடைத்த சந்தோஷம் போல…நீங்களும் முயற்சிக்க போறீங்களா?

வாழ்த்துக்கள்

ஆனால் சாப்பிட்ட பின் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் அதற்கு என்னை  சாட்டு சொல்லாதீங்கப்பா.நான் உங்களை மண் சாப்பிட சொல்லல,சொல்லல,சொல்லல…….