அடுத்த பிறப்பிலாவது உன் அன்பு நிறந்தரமாய் கிடைக்குமா?

தாயே!
நான் முதன் முதலில்
இவ்வுலகத்தில் சுவாசித்த நறுமணமே – உன் வியர்வைதான்.

நான் இப்ப+வுலகில் மகிழ்ந்து சிரிக்க – நீயழுதாய்
உன் வேதனைகளை பொறுத்து , எனக்கு உயிர் கொடுத்தாய்.

நான் முற்பிறப்பில் மாதவம்தான் புரிந்துள்ளேன் போலும் – தாயே உன் கருவில் நான்  வந்துதிக்க.
ஆயிரம் உறவுகள் என்னருகே இருந்தென்ன?
அன்னையே உன் அன்பிற்கு அவை ஈடாகுமா?

ஒவ்வொரு நாளின் விடியலிலும் உன்னைத் தேடுகிறேன்.
இறுதியில்  தோற்றும் போகிறேன்.
அன்று நீ எனக்காய் கூறிய வார்த்தைகள் புரியவில்லை

இன்று புரிகின்றது. பக்கத்தில் நீயில்லை.
உன்னை என் மனவரையில் வைத்து
ப+ஜிக்க மட்டுமே முடிகிறது

நேரில் யாசிக்க முடியவில்லை.
இறைவன் சித்தம் இதுவெனில் யாரால் மாற்ற முடியும்.

அடுத்த பிறப்பிலாவது உன் அன்பை நான் முலுதாய் பெறவேண்டும்.
இறைவா இதற்காவது சித்தம் செய்வாயா?

Advertisements

நினைவுகள்

பள்ளிக்கால கனவுகள் மீண்டும் தொடர்கின்றன…
rose_red
முதன் முதலில்  பாடசாலை செல்லும் நினைவுகள்
என்னை தொடமால் தொட்டு
சரித்து விட்டு செல்கின்றது.
உயிர்மெய்யெழுத்தாக என்னை கலங்க வைத்து
சென்ற அந்தநாள் …
இனிமையான நினைவுகளாக மனமுழுவதும்
தொடர்கின்றன…

சாகஸம்

உனது…சாகசங்களைப் புரிந்து கொள்வதில்…

எனக்கு அடுக்கடுக்காக தோல்விகள் தான் ! ….

ஆனாலும்..

lo vve

.அந்த தோல்விகளே….


எனது ஒவ்வொரு கவிதையையும்


வெற்றி பெற வைத்து விடுகின்றன ! …

காத்திருப்பு

நீ அவளுக்காக காத்திருப்பது-உண்மையெனில்

மாறாத எண்ணத்தை மனதில் நிறுத்திவை.

ஏனெனில்

மாறுதல்களே மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஒரு நாள் வருவாள் உண்ணவள்-காத்திரு

காதலில் காதலிக்காக காத்திருப்பது

வெற்றிக்கான அறிகுறிதான்.

மீண்டும்  உண்னை சந்திப்பேன் உண்ணவளோடு

அதுவரை உண்னுயிர்   தோழியாக

நான்images111

இப்படிக்கு   வி.விஜி

மனக்குமுறல்

என் தோழி தாயிடம் திட்டு வாங்கும்போதெல்லாம்

எனக்கு நினைவு வரும்122

என் கண்ணில் இறைவன் அகப்பட்டால்

தாயை பறித்த குற்றத்திற்கு

தகுந்த தண்டனை வழங்கவேண்டுமென.

காலம் கடந்த ஞானம்

காலம் கடந்த ஞானம்

காதலன் அவளை விட்டு சென்றபின்

தவறவிட்ட ஒரு சில வருடங்களை

மீட்டெடுக்க முடியவில்லை

இருப்பினும் மாதவள் மாறிவிட்டாள்

புரட்சி பெண்ணாக