நான் உங்களை மண் சாப்பிட சொல்லல்ல

இப்போ எல்லாம் சாப்பாடு வாங்கியே என்ட காசெல்லாம் கரையுது.இப்போ இருக்கிற விலைவாசிக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கப்போனாலே 50/= அல்லது 100/= வ தாண்டிடுது. சாப்பாட்ட குறைக்கலாமா?அல்லது சாப்பிடுறத குறைக்கலாமா? இப்படியெல்லாம் புலம்புரவறா நீங்க…?போங்கப்பா,நானும் இப்படிதான் புலம்பிக்கொண்டிருந்தேன்.இந்த விஷயத்த கேள்வி பட்ட பிறகுதான் நாமலும் பழகியிருந்தா இப்போ காசெல்லாம் மீதப்படுத்தியிருக்கலாமே என்று தோணுது. என்ன விஷயம் என்று யோசிக்கிறீங்களா? இருங்க சொல்றன்.

2இந்தியாவில் உள்ள காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் தினமும் அரை கிலோ கிராம் மண் சாப்பிடுகிறார்.இவரின் பெயர் கோபி,வயது 25. இந்திய விழும்புரம் மாவட்டம் தியாக துருகத்தைச் சேர்ந்த இவர் தினசரி சாப்பிடும் மண்ணோடு இடைக்கிடையில் களிமண்,ஆற்று மணல் போன்றவற்றையும் ரசித்து சாப்பிடுகிறாராம்.

அதோடு இவருக்கு ரொம்ப பிடிச்ச,அதிகமாக சாப்பிடும் சாப்பாடு ஏரிக் களிமண். தனது 3வது வயதிலிருந்தே இந்தப்பழக்கத்தினை கொண்டுள்ள இவர் தனது காற்சட்டையில் தினசரி அரை கிலோ கிராமுக்கு மேலாக மண்ணை சேமித்து வைப்பாறாம்.பிறகு சிறிது சிறிதாக எடுத்து நாம் நொருக்கு தீனி சாப்பிடுவது போல  அவரும் சாப்பிடுவாறாம்.

இதைப்பற்றி  அவர் கூறியுள்ள கருத்து………

சிறு வயதிலிருந்தே எனக்கு மண்ணை  உணவாக  உண்ணும் பழக்கம் உண்டு.சிறி வயதில் மிகவும் குறைவாகத்தான் மண்ணை  உண்டு வந்தேன்.ஆனால் தற்போது மிகவும் அதிகமான மண்ணை உண்ணுகிறேன்.இதனால் என் உடம்பிற்கு எந்த வித உபாதைகளும் இதுவரை வந்ததில்லை.எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிட வேண்டும் என்கின்ற ஆர்வம் அதிகரித்து வருகின்றதே தவிர  குறையவில்லை  எனக்கூறியுள்ளார்.

என்ன எல்லோருக்கும் சாப்பாட்டு செலவினை குறைக்க யுக்தியொன்று கிடைத்த சந்தோஷம் போல…நீங்களும் முயற்சிக்க போறீங்களா?

வாழ்த்துக்கள்

ஆனால் சாப்பிட்ட பின் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் அதற்கு என்னை  சாட்டு சொல்லாதீங்கப்பா.நான் உங்களை மண் சாப்பிட சொல்லல,சொல்லல,சொல்லல…….

Advertisements

தீபாவளிக்குப் பின்

வேகும் வெயிலிலும் ,பெய்யும் கடும் மழையிலும் காடு மலை ஏறி கஸ்டப்பட்டு  தொழில் செய்தாலும் நாட்சம்பளம் 405 இனை தான்டாதா என ஏங்கித்தவிக்கும் எம் தோட்டத் தொழிலாளர்கள், அவர்களின் வளமான எதிர்காலத்தை  எதிர்ப்பார்த்து எதிர்ப்பார்த்தே ஏழெட்டு வருடங்கள் மலையேறிவிட்டனர்.

ஆண்டாண்டு காலமாக மாபெரும் தலைவர்கள் பலர் சம்பள உயர்வு என்ற ஆயுதத்தினை முண்ணியாகக் கொண்டு அவர்களின் அரசியல் வாழ்க்கையினை முன்னேற்றினார்களே தவிர மக்களின் வாழ்க்கையை  உயர்த்துவதற்காக எவ்வித செயல்களையும் மேற்கொள்ளவில்லை.

இப்போதும் கூட்டு  ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை  முன்னெடுக்கின்ற  பிரதான கட்சிகள் பல தற்போது விலை போயுள்ள நிலையில் சரியான அணுகுமுறைகளினை பின்பற்றாமல் மக்களினை  ஏச்சுப்பிழைக்கும் செயலினை செய்கின்றன

வருடந்தோறும் தோட்டத் தொழிலாளர்கள் மூலமாக பல கோடி ரூபா வருமானத்தினை  பெற்றுக்கொண்டிருக்கும் தேயிலை தோட்டக் கம்பனிகள் நாட்சம்பளமாக 500 ரூபாவினை வழங்க முன்வராதிருப்பதன் விசித்திரம் புரியாத புதிராகவே உள்ளது.

தீபாவளிக்குப் பின் மீண்டும் இச்சம்பள பிர்ச்சினை தொடரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில் அப்போதாவது   500 ரூபா முடிவுக்கு கொண்டுவரப்படுமா என தொடர்ந்து அவதான விலையில்……………

நினைவுகள்

பள்ளிக்கால கனவுகள் மீண்டும் தொடர்கின்றன…
rose_red
முதன் முதலில்  பாடசாலை செல்லும் நினைவுகள்
என்னை தொடமால் தொட்டு
சரித்து விட்டு செல்கின்றது.
உயிர்மெய்யெழுத்தாக என்னை கலங்க வைத்து
சென்ற அந்தநாள் …
இனிமையான நினைவுகளாக மனமுழுவதும்
தொடர்கின்றன…

விளையாட்டு ஊடகவியல்

ஊடகத்துறை என்பது கடலை போன்றது.இதில் எண்ணற்ற விடயங்களை பற்றி ஆராயலாம்.அதில் ஒரு சில துளிகளே விளையாட்டுத்துறை.

sports

 1. விளையாட்டு ஊடகத்துறை  பற்றி நாம் விளக்க முற்படும் போது முதலில் கவனிக்க வேண்டிய விடயம் புள்ளி விபரங்கள்.நாம் வழங்கும் தகவல்கள் உண்மையானதாக துல்லியமானதாக இருக்கவேண்டும்.
 2. அடுத்ததாக நாம் வழங்கும் தகவல்கள் ஏனையோரை கவரக்கூடியதாக இருக்கவேண்டும்.அப்போதுதான் வாசகருக்கு மீண்டும் உங்களது செய்திகளில் தங்கியிருக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.
 3. நீங்கள் கூறும் செய்தி சுருக்கமாக இலகுவான மொழி நடையில் அமைந்திருக்க வேண்டும்.     உ+ம்: 20 அல்லது 30 சொற்களுக்குள்  அமைய வேண்டும்.இதில் யார் வெற்றி யார் தோல்வி என்ற விடயங்களை குறிப்பிடுவது முக்கிமாகும்.
 4. ஒரு நாள் சுற்றுப்போட்டிகளின் போது ஆரம்ப அறிமுக விபரத்தில் புள்ளிகள் பற்றிய விபரங்கள் எங்கே நடந்தது  மற்றும்  எந்தெந்த நாடுகள் பற்றிய விபரங்களை கூறத்தேவையில்லை.அடுத்துவரும் தகவல்களிலேயே அவை சேர்த்துக்கொள்ளப்படும்.

essay_writing1
செய்தி எழுதும் முறை

1.விளையாட்டுத்துரை பற்றி தொடக்கப்பந்தியில் எழுத வேண்டிய விடயங்கள் என்ன வெனில்

 • யார்?
 • என்ன?
 • எப்போது?
 • எங்கே?
 • புள்ளிவிபரங்கள்
 • பயிற்சியாளர் விபரம் போன்றவையாகும்.

2.ஆட்டத்தின் போது இடம்பெற்ற சுவாரஸ்யமான விடயங்கள்       முக்கியமான விடயங்கள் ,தற்செயலான சம்பவங்கள்       என்பவற்றைகுறிப்பிடலாம்.

3.கடைசிப்பந்தியில் வீரர்களின் தனிப்பட்ட கருத்துக்கள்,அணித்தலைவரின் கருத்துக்கள்  ,அணியின் நிலை,பயிற்சியாளர் பற்றிய விபரங்கள் என்பவை குறிப்பிடப்படவேண்டும்.

thinking

இறுதியாகவும் முக்கியமாகவும்

செய்தியை பற்றி எழுதுகின்ற  நாம் விடயம் பற்றிய முழு அறிவையும்  அதன் சட்டதிட்டங்களையும் நன்கு அறிந்திருக்கவேண்டும்.

தொலைக்காட்சியில் விளையாட்டுச் செய்திகள்

tv தொலைக்காட்சியில்  விளையாட்டு செய்திகளில் காட்சிகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும்  தவிர சொற்களுக்கல்ல.
இங்கு வழங்கப்படும் தகவல்கள் உண்மையானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கவேண்டும்.
இதில் புலமைச்சொத்து உரிமங்கள்  தொடர்பாக அதிக கவனம் தேவை(Intellectual property copy right)

தொலைக்காட்சி ஊடகவியலாளருக்கு உதவும்  உபகரணங்கள்

 1. குறிப்பேடு
 2. எழுது கருவி
 3. கமரா
 4. தொலைநோக்கி
 5. ஒலிப்பதிவுகருவி
 6. கணணி
 7. தொலைபேசி
பரமேஸ்வரனின் 25 மூர்த்திகள்!

பரமேஸ்வரனுடைய மூர்த்திகள் 25 என ஆகமங்கள் கூறும். அந்த மூர்த்திகளாவன :-

4


1. லிங்கோத்பவ மூர்த்தி
2. சுகாசன மூர்த்தி
3. உமா மகேஸ்வர மூர்த்தி
4. கல்யாண மூர்த்தி
5. அர்த்தநாரீஸ்வர மூர்த்தி
6. சோமாஸ்கந்த மூர்த்தி
7. சக்ர ப்ராதான மூர்த்தி
8. திரி மூர்த்தி
9. சங்கரநாராயண மூர்த்தி
10. தட்சிணாமூர்த்தி
11. பிக்ஷôடன மூர்த்தி
12. கங்காள மூர்த்தி,
13. காம சம்ஹார மூர்த்தி
14. கால சம்ஹார மூர்த்தி
15. ஜலந்தர சம்ஹார மூர்த்தி
16. திரிபுர சம்ஹார மூர்த்தி
17. சரப மூர்த்தி
18. நீலகண்ட மூர்த்தி
19. திரிபாத மூர்த்தி
20. கன ஜகபாத மூர்த்தி
21. பைரவ மூர்த்தி
22. விருஷபாரூட மூர்த்தி
23. சந்திரசேகர மூர்த்தி
24. ஆனந்த தாண்டவ மூர்த்தி
25. கங்காதர மூர்த்தி

சாகஸம்

உனது…சாகசங்களைப் புரிந்து கொள்வதில்…

எனக்கு அடுக்கடுக்காக தோல்விகள் தான் ! ….

ஆனாலும்..

lo vve

.அந்த தோல்விகளே….


எனது ஒவ்வொரு கவிதையையும்


வெற்றி பெற வைத்து விடுகின்றன ! …

சமாதான ஊடகவியல்(PEACE JOURNALISM)

சமாதான ஊடகவியல் என்பது செய்திகளை வடிவமைப்பதற்கான விரிவானதும் சாதாரணமானதும் மிகவும் தத்ரூபமானதுமான ஒரு வழிமுறையாகும். முரண்பாட்டுப் பகுப்பாய்வு மற்றும் உருமாற்றத்திற்கான (Conflict Theory and analysis) ஆழ்ந்த அறிவின் பால் எமது கவனத்தைத் திருப்புதல் என்பதுமாகும்.

media1a

சமாதான ஊடகவியல் அணுகுமுறை யானது; ஊடகவியலாளர், அவர்கள் வெளி யிடும் செய்திகள், அதற்கான மூலாதாரங்கள், அதன் விளைவுகள், ஊடகத் தலையீடு தொடர்பான ஒழுக்கங்கள் என்பவற்றுக்கான தொடர்புகளை ஆராயும் ஒரு புதிய வழி காட்டியை (Road map) வழங்குகின்றது.

சமாதானப் பேராசிரியரும் சமாதானத் துக்கும் அபிவிருத்திக்குமான வலையமைப் பின் (Transcend) பணிப்பாளருமான ஜொஹான் கல்டங் முதன்முதலில் 1970 களில் சமாதான ஊடகவியல் என்ற பதத்தை உபயோகிக்க ஆரம்பித்தார்.

இங்கிலாந்தில் லண்டனுக்கருகில் பக்கிங்ஹாம் ஷயரில் இருக்கும் சமாதானத் துக்கும் முரண்பாட்டுக்குமான அமைப்பில் பேராசிரியர் ஜெஹான் கல்டங் உடன் இணைந்து பணியாற்றியபோது அவரது மூலாதார மாதிரிகள் பெறப்பட்டு ஊடகவி யலாளர் மற்றும் தொழில்சார் வல்லுனர்களது ஆலோசனைகள் பெறப்பட்டு சமாதான ஊடகவி யல் அபிவிருத்தி செய்யப்பட்டது.

வவுனியா முகாம்களில் தமிழரின் நிலை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எம் இன மக்கள் இதுவரை காலமும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் தொடர்ந்து முகாம்களிலேயே  வைக்கப்பட்டு  துன்புறுத்தப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

vavuniya

இருப்பினும்  அம்மக்கள் முகாம்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பலர் பாரா முகமாக இருப்பது ,எம் அரசாட்சியின் அசமந்தப்போக்கினை  காட்டுகிறது.

மக்கள் தங்களுடைய வாழ்க்கையை தமது விருப்பத்திற்கேற்ப  அமைத்துக் கொள்ளும் உரிமை இருந்த போதும், இலங்கையில் நடமாடும் சுதந்திரம்  என்ற  அடிப்படை கோட்பாடு விளையாட்டாகவே கணிக்கப்படுகின்றது.மேலும் இது தொடர்பாக அமெரிக்க சனத்தொகை ,அகதிகள் ,குடிவரவு,பணியகத்தின் உதவி செயலாளர் எரிக் பி.சுவாட்ஸ் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக முகாம்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் ,மக்கள் அதிகளவாக vavuniya 2தொற்றுநோய்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்தார்.உண்மையில் கூறப்போனால் மக்களை பற்றிய விமர்சனங்களை வழங்குவதற்காகவே வெளிநாட்டு பயணம் என்கிற போக்கில் அண்ணியர்கள் நுழைவது வழமையாகிவிட்டது.vavuniya 1

இனி வரும்  காலங்களிலாவது மக்களை பற்றிய விமர்சனங்களை தவிர்த்து நிலைமைகளை மாற்றக்கூடிய தலைவர்கள் வருவார்களா என்பது சந்தேகத்துக்குரியதே.

காத்திருப்பு

நீ அவளுக்காக காத்திருப்பது-உண்மையெனில்

மாறாத எண்ணத்தை மனதில் நிறுத்திவை.

ஏனெனில்

மாறுதல்களே மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஒரு நாள் வருவாள் உண்ணவள்-காத்திரு

காதலில் காதலிக்காக காத்திருப்பது

வெற்றிக்கான அறிகுறிதான்.

மீண்டும்  உண்னை சந்திப்பேன் உண்ணவளோடு

அதுவரை உண்னுயிர்   தோழியாக

நான்images111

இப்படிக்கு   வி.விஜி