இங்கிலாந்து தொடர்ந்தும் வெற்றிப் பாதையில்

இங்கிலாந்து பங்காதேஷ் அணிகளிற்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கட் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது, போட்டி நேற்று பகலிரவு ஆட்டமாக நொட்டிங்காம்மில் நடைபெற்றது. இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இந்து 250 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ரக்;கீப் உல் ஹசன் 76 ஓட்டங்களையும் , ஜுனைட் சித்தீப் 51 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் ஜேம்ஸ் என்டர்சன் 74 ஓட்டங்களிற்கு 3 விக்கட்டுகளையும் , டிம் பிரெஸ்னன் 40 ஓட்டங்களிற்கு 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர். 251 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 45.1 ஓவர் நிறைவில் 4 விக்கட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இயர்ன் பெல்  ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களையும் , அணித்தலைவர் என்ரூ ஸ்டோர்ஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடு;த்தனர். பந்துவீச்சில் சக்கீப் அல் ஹசன் 35 ஓட்;டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்  போட்டியின் ஆட்டநாயகனாக இயர்ன் பெல் தெரிவானார். இவ்வெற்றி மூலம் தொடரில் 1-0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements