வவுனியா முகாம்களில் தமிழரின் நிலை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எம் இன மக்கள் இதுவரை காலமும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் தொடர்ந்து முகாம்களிலேயே  வைக்கப்பட்டு  துன்புறுத்தப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

vavuniya

இருப்பினும்  அம்மக்கள் முகாம்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பலர் பாரா முகமாக இருப்பது ,எம் அரசாட்சியின் அசமந்தப்போக்கினை  காட்டுகிறது.

மக்கள் தங்களுடைய வாழ்க்கையை தமது விருப்பத்திற்கேற்ப  அமைத்துக் கொள்ளும் உரிமை இருந்த போதும், இலங்கையில் நடமாடும் சுதந்திரம்  என்ற  அடிப்படை கோட்பாடு விளையாட்டாகவே கணிக்கப்படுகின்றது.மேலும் இது தொடர்பாக அமெரிக்க சனத்தொகை ,அகதிகள் ,குடிவரவு,பணியகத்தின் உதவி செயலாளர் எரிக் பி.சுவாட்ஸ் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக முகாம்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் ,மக்கள் அதிகளவாக vavuniya 2தொற்றுநோய்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்தார்.உண்மையில் கூறப்போனால் மக்களை பற்றிய விமர்சனங்களை வழங்குவதற்காகவே வெளிநாட்டு பயணம் என்கிற போக்கில் அண்ணியர்கள் நுழைவது வழமையாகிவிட்டது.vavuniya 1

இனி வரும்  காலங்களிலாவது மக்களை பற்றிய விமர்சனங்களை தவிர்த்து நிலைமைகளை மாற்றக்கூடிய தலைவர்கள் வருவார்களா என்பது சந்தேகத்துக்குரியதே.

காத்திருப்பு

நீ அவளுக்காக காத்திருப்பது-உண்மையெனில்

மாறாத எண்ணத்தை மனதில் நிறுத்திவை.

ஏனெனில்

மாறுதல்களே மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஒரு நாள் வருவாள் உண்ணவள்-காத்திரு

காதலில் காதலிக்காக காத்திருப்பது

வெற்றிக்கான அறிகுறிதான்.

மீண்டும்  உண்னை சந்திப்பேன் உண்ணவளோடு

அதுவரை உண்னுயிர்   தோழியாக

நான்images111

இப்படிக்கு   வி.விஜி

மனக்குமுறல்

என் தோழி தாயிடம் திட்டு வாங்கும்போதெல்லாம்

எனக்கு நினைவு வரும்122

என் கண்ணில் இறைவன் அகப்பட்டால்

தாயை பறித்த குற்றத்திற்கு

தகுந்த தண்டனை வழங்கவேண்டுமென.

காலம் கடந்த ஞானம்

காலம் கடந்த ஞானம்

காதலன் அவளை விட்டு சென்றபின்

தவறவிட்ட ஒரு சில வருடங்களை

மீட்டெடுக்க முடியவில்லை

இருப்பினும் மாதவள் மாறிவிட்டாள்

புரட்சி பெண்ணாக

இறால் வளர்ப்பால் ஏற்பட்டுள்ள சமூக பொருகாதார பிரச்சினைகள்

இறால் என்றாலே நா ஊறுகின்றது. இறாலின் சுவையும் மகிமையும் மட்டும் அறிந்த நாம் அதனுள் உள்ள சோக கதைகளை மறந்து விட்டோம். சிலாப உடப்பு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் இவ் இறால் தொழிலுக்கு  எதிர்ப்புள்ளவர்களாக இருக்கின்றனர். காரணம் உடப்பு பிரதேசத்தில்  இறால் பண்ணைகளை அண்டி வாழ்கின்ற மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

1993.94ஆம் ஆண்டுகளில் கைதொழிலாக இறால் கைதொழில் உருவெடுத்தது. இவ் தொழிலானது தற்போத வரை பரம்பரை தொழிலாக யெ;து வரப்படுகின்றது. இலங்கை என்ற நமது அழகிய நாட்டை சுற்றி உவர் நீர் காணப்பட்டபோதும் இறால் உற்பத்தி செய்வதற்கு
உகந்த நிலங்க் குறைவாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாகவே இறால் பண்ணைகளின் பரம்பலும் இலங்கையில் ஒரு குறித்த பகுதிகளிம் மட்டுமே காணப்படுகின்றது.
வடமேல் மாகணத்தில் இறால் வளர்ப்பானது 120கிலோமீற்றர் நீளமும்  10கிலோமீற்றர் அகலமும் நிலபரப்பை கொண்டு காணப்படுகின்றது. சிலாபம் கடல்நீரேரிஇ முந்தல் கடல்நீரேரி இ புத்தளம் கடல்நீரேரி முதலானவை இவ் மாகணத்தில் அடங்குகின்றன.அந்தவகையில் நிலமானது களப்பு கடனீரேரியை கொண்ட பிரதேசமாகவும் உவர்நீரை கொண்டதாகவும் காணப்பட வேண்டும். இதேவேளை இறால் வளர்ப்புக்கு நில பசளையானது 75 சதவீதம் தேவை. ஆந்த வகையில் இவ் அனைத்து அம்சங்களையும் கொண்டு உடப்பு பிரதேசம் காணப்படுகின்றது. இவ் பிரதேசத்தில் அங்கிகரிக்கப்பட்ட பண்ணைகளும் சட்டபூர்வமற்ற பண்ணைகளும் பாரிய நிலபரப்பில் காணப்படுகின்றது. இவை அனைத்தும் சூழழையும் மனிதனையும் கவனத்தில் கொள்ளாது வர்த்தக நோக்கை மட்டும் கவனத்தில் கொண்டு இறால் பண்ணையாளர்கள் தொழில் செய்து வருகிறார்கள். Continue reading

மலைகளில் கசியும் இரத்தக் கண்ணீர்.

ஒரு நாடு அல்லது சமூகம் வந்தடைந்திருக்கும் வளர்ச்சிப்போக்கினைக் கொண்டே அந்நாட்டு மக்களினை அளவு கோலின்றி அளவிட்டுக்கொள்ள முடியும்.
அவ்வாறுதான் எம் இலங்கை நாட்டின் அபிவிருத்தி வளர்ச்சிப் போக்கினை கொண்டே எம் நாட்டையும் வல்லரசு நாடென்று கூறமுடியுமா?கூறியிருக்கலாம்! நாட்டில் செங்கோல் ஆட்சி திழைத்திருந்தால், தற்போது நாட்டின் நிலை பாரபட்சமுள்ள பக்கச்சார்பான அரசியல். பாதிக்கப்பட்டோர் அப்பாவி மக்களே. இந்நிலை ஏற்படக் காரணமே எம் அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கு. ஒரு நாட்டின் நீதித்துரை செம்மையாக அமையுமாயின் அந்நாட்டின் ஆட்சியும் செம்மையுறும். எம் நாட்டுச் சட்டம் தூசு படிந்து கிடக்கின்றது.தட்டியெடுக்க எவருக்கும் தைரியமில்லை. இன்னிலை தொடர்ந்தால் மக்களுக்கு இன்னல்களும் தொடரும்.images1
பிரித்தானிய நாடுகள் ஆட்சியின்போது எமக்கு சட்டக்கோவைகளை திறம்பட அமைத்து கொடுத்துள்ளனர். ஆனால் இங்குள்ளோரின் சிந்தனையோ அஹிம்சை நீங்கிய இம்சை செயல்களால் ஏழைகளின் உயிர் குடிக்கும் இரத்தக்காட்டேறிகளாய் மாறிக்கொண்டு இருக்கின்றது.
ஒரு புறம் யுத்தம். மறுபுறம் அடிமைத்தனம். எங்கே சென்று கொண்டிருக்கின்றது எம் நாடு? பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறவர்கள் எம் தமிழர்களே. யுத்தத்தினால் இலங்கைத்தமிழர்கள் அடிமைத்தனத்தினால் இந்தியத்தமிழர்கள். அரசின் சமநிலை எதில் திணிக்கப்பட்டுள்ளது. அறியாதோர் பலர். யுத்தம் முடியும் தருவாயில் உள்ளதாக பரபரப்பான செய்திகள். உண்மை ஒருவனே அறிவான். அடிமைத்தனத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் எம் மலையக இந்தியத்தமிழர்களுக்கு விடிவு எப்போது? கள்ளத்தோணி எமக்கு வழங்கப்பட்டிருக்கும் உயரிய பட்டம். எல்லோரின் ஏளனப்பார்வையும் எம்மீதே.images2images3
18ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து இங்கு வந்துள்ள எம்மக்கள் 1984 இல் சுதந்திரமடையும் போது எமக்கும் சுதந்திரம் கிடைக்கும் என எண்ணி ஏமாந்ததே மீதமாக உள்ளது.இப்போதும் ஆங்கிலேயரின் அடிச்சுவட்டை பின்பற்றும் கம்பனிக்காரர்களில் ஆணாதிக்கவாதிகள் சிலர் எம் மலையக பெண்களை அடிமைப்படுத்தி ஆடு,மாடுகள் போலவே இன்னும் நடத்திவருகின்றனர். குடும்பம்,சமூகம்,சமயம்,கலாச்சாரம் என சிறைகளுக்குள் அடைக்கப்பட்ட வாழ்க்கையே இன்னும். பொதுவான வரலாற்றுப் பாரியமொன்று எம் இந்தியத் தமிழர்களுக்கும் உண்டு. எம் வருகையின் பின்பே இலங்கை நாடு முன்னேறத் தொடங்கியது. அவ்வரலாறு வறுமாறு.. Continue reading