சாகஸம்

உனது…சாகசங்களைப் புரிந்து கொள்வதில்…

எனக்கு அடுக்கடுக்காக தோல்விகள் தான் ! ….

ஆனாலும்..

lo vve

.அந்த தோல்விகளே….


எனது ஒவ்வொரு கவிதையையும்


வெற்றி பெற வைத்து விடுகின்றன ! …

சமாதான ஊடகவியல்(PEACE JOURNALISM)

சமாதான ஊடகவியல் என்பது செய்திகளை வடிவமைப்பதற்கான விரிவானதும் சாதாரணமானதும் மிகவும் தத்ரூபமானதுமான ஒரு வழிமுறையாகும். முரண்பாட்டுப் பகுப்பாய்வு மற்றும் உருமாற்றத்திற்கான (Conflict Theory and analysis) ஆழ்ந்த அறிவின் பால் எமது கவனத்தைத் திருப்புதல் என்பதுமாகும்.

media1a

சமாதான ஊடகவியல் அணுகுமுறை யானது; ஊடகவியலாளர், அவர்கள் வெளி யிடும் செய்திகள், அதற்கான மூலாதாரங்கள், அதன் விளைவுகள், ஊடகத் தலையீடு தொடர்பான ஒழுக்கங்கள் என்பவற்றுக்கான தொடர்புகளை ஆராயும் ஒரு புதிய வழி காட்டியை (Road map) வழங்குகின்றது.

சமாதானப் பேராசிரியரும் சமாதானத் துக்கும் அபிவிருத்திக்குமான வலையமைப் பின் (Transcend) பணிப்பாளருமான ஜொஹான் கல்டங் முதன்முதலில் 1970 களில் சமாதான ஊடகவியல் என்ற பதத்தை உபயோகிக்க ஆரம்பித்தார்.

இங்கிலாந்தில் லண்டனுக்கருகில் பக்கிங்ஹாம் ஷயரில் இருக்கும் சமாதானத் துக்கும் முரண்பாட்டுக்குமான அமைப்பில் பேராசிரியர் ஜெஹான் கல்டங் உடன் இணைந்து பணியாற்றியபோது அவரது மூலாதார மாதிரிகள் பெறப்பட்டு ஊடகவி யலாளர் மற்றும் தொழில்சார் வல்லுனர்களது ஆலோசனைகள் பெறப்பட்டு சமாதான ஊடகவி யல் அபிவிருத்தி செய்யப்பட்டது.